இடைக்கால பட்ஜெட் தாக்கல்… நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் உரை!

Nirmala Sitharaman

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கிய நிலையில், இன்று மத்திய அரசின் 2024-25ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்ட தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, நாடாளுமன்றம் வருவதற்கு முன்பு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து பெற்றார். இதன்பின் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மத்திய அரசின் 2024-25ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 6வது முறையாக நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்து தற்போது உரையாற்றி வருகிறார். அதன்படி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையில், கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் சென்றுகொண்டிருக்கிறது.

நாடு பெரும் சவால்களை சந்தித்த நேரத்தில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி 2014ல் பொறுப்பேற்றது. பாஜக ஆட்சி அமைத்த பிறகு இந்திய பொருளாதாரம் ஊக்கம் பெற்றது. பெண்களுக்கான இட ஒதுக்கீடு, முத்தலாக் தடைச் சட்டம், கிராமப்புறங்களில் 70% ஆன வீடுகள் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பெண்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது.

வரம்பிற்குள் வரி வசூல்.. கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிதிப்பற்றாக்குறை.! – தேசிய வரி வசூல் தலைவர்.!

சமூக அடிப்படையிலும், புவியியல் அடிப்படையிலும் மேம்பாட்டு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது  நாட்டு மக்கள் புதிய நம்பிக்கையை பெற்றுள்ளனர். ரேஷனில் இலவச உணவுப்பொருள் கொடுத்ததன் மூலம் உணவுக்கான கவலையை போக்கிவிட்டோம். 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம். 34 லட்சம் கோடி உதவித்தொகை நேரடியாக ஏழை மக்களின் ஜன்தன் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது.

ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் ஆகிய 4 தரப்பினரின் முன்னேற்றத்துக்கு பாஜக அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை திட்டமிட்டு செயல்படுத்துகிறோம். பாஜக அரசின் அற்புதமான பணியை அடிப்படையாக கொண்டு மக்கள் மீண்டும் வாக்களித்து ஆட்சியில் அமர்த்துவார்கள் என நம்புகிறோம்.

நாட்டின் அனைத்து தரப்பினருக்கும் சமமான வளர்ச்சி என்பதை மந்திரமாக கொண்டு செயல்பட்டு வருகிறோம். 2047ல் புதிய இந்தியாவை படைப்போம். சமூகநீதியே பாஜக அரசின் பிரதான நோக்கம். ஊழல் ஒழிப்பு என்பதும் வாரிசு அரசியல் ஒழிப்பது என்பதையும் வெளிப்படைத் தன்மையுடன் செய்து வருகிறோம் எனவும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்