திரிபுரா கோவிட் பராமரிப்பு மையத்தில் பணிபுரியும் டாக்டர் மீது எச்சில் துப்பியதால் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி திரிபுரா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திரிபுராவில் விடுதியில் அமைக்கப்பட்டிருக்கும் கோவிட் பராமரிப்பு மையத்தில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் சங்கீதா சக்ரவர்த்தி பகத்சிங். இந்த மையத்தில் கடந்த ஜூலை 24ம் தேதி புதிதாக பிறந்த குழந்தைகளுடன் ஐந்து பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் புதிதாக நோயாளிகளை நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்று கூறிய போது மருத்துவர்கள் அந்த பெண்களை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் அவர்கள் டாக்டர் சங்கீதா மீது எச்சில் துப்பியதாகவும், கொரோனாவால் பாதிக்கப்படுவீர்கள் என்று அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
அதனையடுத்து நியூ கேபிடல் காம்ப்ளக்ஸ் (என். சி. சி) காவல் நிலையத்தில் சுகாதார சேவை இயக்குநர் பதிவு செய்த FIR அடிப்படையில் நான்கு பெண்களை கைது செய்தனர். அதனையடுத்து நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் நால்வருக்கும் செவ்வாய்க்கிழமையன்று திரிபுரா நீதிமன்ற மாஜிஸ்திரேட் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. விழுப்புரம்-சென்னை சாலையிலுள்ள தனியாா்…
சென்னை : புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களில்…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் விரதம் இருந்து வரும் பக்தர்களின்…
விழுப்புரம் : விக்கிரவாண்டியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்று வந்த லியா லட்சுமி என்ற மூன்றரை வயது…
சிட்னி : இன்று பார்டர் கவாஸ்கர் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் சிட்னி மைதானத்தில் தொடங்கி…
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…