மணிப்பூரில் டாக்டர் மீது எச்சில் துப்பியதற்காக கைது செய்யப்பட்ட 4 பேருக்கு இடைக்கால ஜாமீன்.!

Default Image

திரிபுரா கோவிட் பராமரிப்பு மையத்தில் பணிபுரியும் டாக்டர் மீது எச்சில்  துப்பியதால் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி திரிபுரா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திரிபுராவில் விடுதியில் அமைக்கப்பட்டிருக்கும் கோவிட் பராமரிப்பு மையத்தில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் சங்கீதா சக்ரவர்த்தி பகத்சிங். இந்த மையத்தில் கடந்த ஜூலை 24ம் தேதி புதிதாக பிறந்த குழந்தைகளுடன் ஐந்து பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் புதிதாக நோயாளிகளை நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்று கூறிய போது மருத்துவர்கள் அந்த பெண்களை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் அவர்கள் டாக்டர் சங்கீதா மீது எச்சில் துப்பியதாகவும், கொரோனாவால் பாதிக்கப்படுவீர்கள் என்று அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

அதனையடுத்து நியூ கேபிடல் காம்ப்ளக்ஸ் (என். சி. சி) காவல் நிலையத்தில் சுகாதார சேவை இயக்குநர் பதிவு செய்த FIR அடிப்படையில் நான்கு பெண்களை கைது செய்தனர். அதனையடுத்து நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் நால்வருக்கும் செவ்வாய்க்கிழமையன்று திரிபுரா நீதிமன்ற மாஜிஸ்திரேட் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்