வட்டி மீதான வட்டி…இன்று விசாரணை..!
நாடு முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதனை கருத்தில் கொண்டு மார்ச் முதல் ஆகஸ்ட் வரை 6 மாதங்களுக்கு கடன் தவணைகளை ஒத்தி வைக்கப்பட்டது.
6 மாத தவணைகளுக்கு வட்டி மற்றும் வட்டிக்கான வட்டி என வங்கிகள் வசூலிக்க முடிவு செய்தன. கடனைச் செலுத்த முடியாமல் பொதுமக்கள் திணறும் நிலையில் வட்டிக்கு மேலும் வட்டி வசூலிப்பதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பான, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த வாரம் அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரிக்கப்பட உள்ளது.