வங்கிக்கடன் வட்டிக்கு வட்டி.! வங்கிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.!
நாடு முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், வங்கியில் கடந்த மார்ச் முதல் மே வரையில் 3 மாதம் தவணையை தாமதமாக கட்டலாம் அறிவிக்கப்பட்டது.
ஆனால், பல வங்கிகள் தவணை காலத்திற்கு ஒரு வட்டி வசூல் செய்வதாக, பலர் கூறிய நிலையில் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, SBI தரப்பு தவணைத் தொகைக்கு வட்டி விதிப்பதை தவிர்க்க முடியாது என வாதிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கடன்களுக்கு தவணை மற்றும் வட்டி செலுத்துவதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், தவணை ஒத்திவைப்பு சலுகை காலத்துக்கும் வட்டி விதிக்கப்படுவது தான் கவலை அளிக்கிறது என கூறினர்.
கொரோனா காலத்தில், வங்கிக்கடன் வட்டிக்கு வட்டி வசூலிப்பது தொடர்பாக தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட வங்கிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இது தொடர்பாக ரிசர்வ் வங்கி மற்றும் நிதி அமைச்சகம் 3 நாட்களில் பதிலளிக்க வேண்டும். 6 மாத தவணைத் தொகைக்கு வட்டி முழுவதும் தள்ளுபடி செய்ய பரிசீலிக்கப்படுமா.. ? என கேள்வி எழுப்பிய நிலையில் வழக்கை ஜூலை 17- ம் தேதிக்கு ஒத்திவைத்தது.