கொரோனா காலத்தில் வங்கி கடன்களில் வட்டிக்கு வட்டி! உச்சநீதிமன்றத்தில் பிரமாண பாத்திரம் தாக்கல் செய்த ரிசர்வ் வங்கி!
காமத் குழுவின் பரிந்துரைகள் அடங்கிய தொகுக்கப்பட்ட பிரமாண பத்திரத்தை ரிசர்வ் வங்கி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கொரோனா காலத்தில், வங்கிக்கடன் வட்டிக்கு வட்டி வசூலிப்பது தொடர்பாக தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட வங்கிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இது தொடர்பாக ரிசர்வ் வங்கி மற்றும் நிதி அமைச்சகம் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், வங்கி கடன்களில் வட்டிக்கு வட்டி விதிக்கும் நடைமுறையை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் தொடர்பாக, காமத் குழுவின் பரிந்துரைகள் அடங்கிய தொகுக்கப்பட்ட பிரமாண பத்திரத்தை ரிசர்வ் வங்கி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.