Categories: இந்தியா

விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன், இலவச மின்சாரம் – ராஜஸ்தான் முதல்வர் அறிவிப்பு

Published by
பாலா கலியமூர்த்தி

2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின்போது, தற்செயலாக பழைய பட்ஜெட்டை வாசித்த ராஜஸ்தான்  முதல்வர் அசோக் கெலாட்.

ராஜஸ்தானில் பட்ஜெட் தாக்கல் – வட்டியில்லா கடன்:

nointrest

ராஜஸ்தானில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான அரசு இன்று இந்த ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்தது. பட்ஜெட் தாக்கலின்போது, பட்ஜெட்டை வாசித்த முதல்வர் அசோக் கெலாட், பல்வேறு சலுகைகள் மற்றும் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், இந்த ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டின் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் இருந்து ரூ.3,000 கோடி வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்:

மேலும் விவசாயிகளுக்கு 2,000 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் விவசாயிகளுக்கு வீட்டுக்கடன்களில் 5% கடன் மானியம் வழங்கப்படும் எனவும் அசோக் கெலாட் அறிவித்தார். இதுமட்டுமில்லாமல், ராஜஸ்தானில் மாதந்தோறும் வீட்டு உபயோக மின்சாரம் 100 யூனிட் இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, 50 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கி வந்த நிலையில், தற்போது 100 யூனிட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வரியில்லா பட்ஜெட்:

இந்த குறிப்பாக பட்ஜெட்டில் புதிதாக எந்த ஒரு வரியும் அறிவிக்கப்படவில்லை என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த 4 பட்ஜெட்டுகளிலும் எந்த ஒரு வரியும் மக்களுக்கு விதிக்கப்படவில்லை. மக்களுக்கு இதன் மூலம் வரி செலுத்துவதிலிருந்து சலுகை அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

பழைய பட்ஜெட்டை வாசித்த ராஜஸ்தான் முதல்வர்:

இதனிடையே, ராஜஸ்தான் சட்டமன்றத்தில் நடைபெற்ற 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின்போது, பட்ஜெட்டை வாசித்த முதல்வர் அசோக் கெலாட் தற்செயலாக பழைய பட்ஜெட்டை வாசித்தது பேசும் பொருளாக மாறியுள்ளது. அசோக் கெலாட், சுமார் 8 நிமிடங்கள் பழைய பட்ஜெட்டையே வாசித்துக்கொண்டிருக்க, உடனடியாக தலைமைச் செயலாளர் அதனைச் சுட்டிக்காட்டி நிறுத்தியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் அமளி:

 

இதனால் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் அவையில் கூச்சல் போட்டு அமளியில் ஈடுபடத் தொடங்கினர். இதன் காரணமாக சுமார் 30 நிமிடங்களுக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் பட்ஜெட்டை தாக்கல்செய்த அசோக் கெலாட், இது தவறுதலாக நடந்துவிட்டது. அதற்காக நான் வருந்துகிறேன் என்றும் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, பட்ஜெட் உரையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கர்நாடகாவில் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!

பீதர்: கர்நாடகா மாநிலம் பீதர் மாவட்டத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்பப் பணம் எடுத்துச் சென்றவர்கள் மீது பட்டப்பகலில் மர்ம நபர்கள்…

19 minutes ago

“வணங்கானில் என்னை கோட்டியாக வாழ வைத்த என் இயக்குனருக்கு நன்றி” – அருண் விஜய் உருக்கம்.!

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 'வணங்கான்' திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.…

39 minutes ago

பும்ரா இல்லைனா ‘இவர்’ தான் டீமுக்கு வேணும்! இந்திய அணி முன்னாள் வீரர் விருப்பம்

டெல்லி  : அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி 2025  கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8…

44 minutes ago

“நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த…” விடாமுயற்சி ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகும்! ரிலீஸ் எப்போது தெரியுமா?

சென்னை: விடாமுயற்சி பொங்கல் பண்டிகை ரிலீஸில் இருந்து தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட்டை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஒரு…

1 hour ago

“இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் மனிதாபிமான உதவிகளுக்கு வழிவகுக்கிறது..” இந்தியா வரவேற்பு!

டெல்லி : பாலஸ்தீன நாட்டின் எல்லையில் உள்ள காசா நகரில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்குமான தாக்குதல் என்பது…

1 hour ago

ஸ்பேடெக்ஸ் திட்டம் : இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து.!

டெல்லி : விண்வெளியில் 2 செயற்கைகோள்களை இணைக்கும் டாக்கிங் செயல்முறை வெற்றிகரமாக நிறைவேறியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதன்மூலம் 2 செயற்கைகோள்களை…

2 hours ago