தீவிரமடையும் டவ்-தே புயல்…! மஹாராஷ்டிராவில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம்…!
மஹாராஷ்டிராவில், ரத்னகிரி, சிந்துதுர்க் மற்றும் ராய்காட் மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் 12,420 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
டவ் – தே புயல், அதிதீவிர புயலாக மாறியுள்ள நிலையில், அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள புயல், நாளை குஜராத் கடலோரப்பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது,காற்றுடன் கூடிய பாலத்தை மலை பேயும் என்றும், குஜராத், மராட்டியம் ஆகிய மாநிலங்கள் பாதிப்புக்குள்ளாகும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதன்படி, மஹாராஷ்டிராவில், ரத்னகிரி, சிந்துதுர்க் மற்றும் ராய்காட் மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் 12,420 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், ராய்காட் மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மும்பை, தானே மற்றும் பால்கருக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மாநிலத்தின் அனைத்து கடலோர மாவட்டங்களில் அதிகாரிகள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.