ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் மாதம் 30 -ஆம் தேதி தொடங்கி, இந்தமாதம் 20-ஆம் தேதி வரை 5 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் காங்கிரஸ்-ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா -ராஷ்டிரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.இந்த கூட்டணி சார்பாக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா செயல் தலைவர் ஹேமந்த் சோரன் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.பாஜக கூட்டணியில் இருந்த ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா ,அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம் ஆகிய கட்சிகள் தேர்தலுக்கு முன்பே பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் பாஜக மட்டும் தனித்து போட்டியிட்டது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் காங்கிரஸ்-ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா -ராஷ்டிரீய ஜனதா தளம் கூட்டணி 47 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது.இங்கு ஆட்சியமைக்க குறைந்தபட்சம் 41 தொகுதிகளில் வெற்றிபெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில் இந்த கூட்டணி 47 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது.ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 30 தொகுதிகளிலும்,காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், ராஷ்டிரீய ஜனதா தளம் தலா ஒரு தொகுதியிலும் வெற்றிபெற்றது. பாஜக 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது.
இதனால் ஆளுநர் திரவுபதி முர்முர்வை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் ஹேமந்த் சோரன். இதனையடுத்து ஜார்கண்ட் மாநிலத்தின் புதிய முதமைச்சராக நாளை (டிசம்பர் 29-ஆம் தேதி )ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா செயல் தலைவர் ஹேமந்த் சோரன் பதவி ஏற்க உள்ளார்.ஹேமந்த் சோரன் பதவி ஏற்பு விழா ராஞ்சி மோஹராபடி மைதானத்தில் நடைபெறுகிறது.விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. இந்த விழாவில் காங்கிரஸ் எம்.பி. ராகுல், பிரியங்கா,தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார்,திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்களும் இதில் பங்கேற்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
40 வருடங்கள் காத்திருந்து அத்திவரதரை தரிசிக்க காரணம் என்ன மூலவரின் மறைக்கப்பட்ட ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
சென்னை : தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…
மெல்போர்ன்: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது டெஸ்ட்…