தீவிரமடையும் போராட்டம்… விவசாயிகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம்!

National Security Act

விளைப்பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்தல், விவசாய கடன் தள்ளுபடி, மின்சாரம் திருத்த சட்டம் ரத்து உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

பஞ்சாப், உத்தரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாய அமைப்பினர் டெல்லி சலோ பேரணியை கடந்த வாரம் தொடங்கிய நிலையில், பஞ்சாப் – ஹரியானா எல்லையான ஷம்பு பகுதியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தி குவிந்து வருகின்றனர்.

இருப்பினும், விவசாயிகளை டெல்லிக்குள் நுழையவிடமால் ஹரியானா, பஞ்சாப் மாநில எல்லைகளில் காவல்துறையினர் தீவிர தடுப்புகளை அமைத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல், விவசாயிகள் முன்னேற விடாமல் கண்ணீர் புகை கண்டுகள் வீசி கூட்டத்தை கலைக்க காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி காலமானார்..!

இதனிடையே, விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 4 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாய சங்கத்தினர் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து மத்திய அரசு தரப்பில் கூறியதாவது, மத்திய அமைச்சர்கள் விவசாயிகளுடன் 4 சுற்று பேச்சு வார்த்தையில், சாதகமான விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளது, தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது.

வன்முறை, உயிர் மற்றும் உடமைகளுக்கு சேதம் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இந்த சுழலில், மத்திய அரசை கண்டித்து ஷம்பு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்க தலைவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஹரியானா காவல்துறை திட்டமிட்டுள்ளது.  அரசு சொத்துக்களை சேதப்படுத்தியதாக அம்பாலா காவல்துறை கூறியுள்ளது.

இதுதொடர்பாக அம்பாலா காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஷம்பு எல்லையில் போடப்பட்டுள்ள தடுப்புகளை உடைக்க விவசாயிகள் அமைப்புகளால் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, கற்கள் வீசி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சிகள் தினந்தோறும் நடந்து வருகின்றன.

இதனால் அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் பல விவசாய தலைவர்கள் தீவிர பங்கு வகித்து, சட்டம் ஒழுங்கை கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே, தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) 1980ன் கீழ், விவசாய சங்கங்களின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹரியானா காவல்துறை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்