இன்டெல் முன்னாள் தலைவர் அவதார் சைனி… சாலை விபத்தில் உயிரிழப்பு..!
Avtar Saini: மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் வேகமாக வந்த கேப் மோதியதில் இன்டெல் இந்தியாவின் முன்னாள் தலைவரான அவதார் சைனி உயிரிழந்தார். நேற்று அதிகாலை 5.50 மணியளவில் சைனி (68) தனது நண்பர்களுடன் நெருல் பகுதியில் உள்ள பாம் பீச் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
READ MORE- உச்சகட்ட பரபரப்பு.! 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அதிரடி சஸ்பெண்ட்.!
நேற்று சைக்கிளில் சென்று கொண்டிருந்த அவதார் சைனி அப்போது திடீரென வேகமாக வந்த கேப் ஒன்று சைனியின் சைக்கிள் மீது பின்னால் மோதியது. இதில் சைனி சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டார். இந்த விபத்தில் சைனிக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும், அவருடன் சைக்கிளில் வந்த சக நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். செம்பூரில் சைனி வசித்து வருகிறார். தனது மனைவி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்த பிறகு தனியாக வசித்து வந்தார். அவரது மகனும் மகளும் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். சைனி 1982 முதல் 2004 வரை இன்டெல் இந்தியாவில் துணைத் தலைவராக இருந்தார்.
READ MORE – அதிகாலை நடந்த சோகம்.. பிக்-அப் வாகனம் கவிழ்ந்ததில் 14 பேர் உயிரிழப்பு.. 20 பேர் காயம்..!
அதன் போது அவர் இன்டெல் 386, இன்டெல் 486 உள்ளிடவை வடிவமைக்க உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது. விபத்து ஏற்படுத்திய கேப் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றபோது அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். டிரைவர் மீது போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.