உளவுத்துறை என்பது ஜேம்ஸ்பாண்ட் படங்கள் போன்று கவர்ச்சியானது அல்ல.! மனோஜ் நரவானே பேச்சு.!
- ரா உளவு அமைப்பின் முதல் தலைவரான ஆர்.என்.காவ் குறித்த புத்தக வெளியீட்டு விழா மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடைபெற்றது.
- அதில் உளவுத்துறை சார்ந்த உலகம் என்பது ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்கள் போன்று கவர்ச்சியானது அல்ல, மனோஜ் நரவானே தெரிவித்துள்ளார்.
ரா உளவு அமைப்பின் முதல் தலைவரான ஆர்.என்.காவ் குறித்த புத்தக வெளியீட்டு விழா மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய, ராணுவத் தலைமைத் தளபதியாக பதவியேற்கவுள்ள மனோஜ் நரவானே, ராணுவ நடவடிக்கைகளும் புலனாய்வுத் தகவல்களும் ஒன்றுடன் ஒன்று கைகோர்த்துச் செல்வதாகவும், எப்போது ராணுவ நடவடிக்கைகள் தொடங்கினாலும் அவை புலனாய்வுப் பிரிவு தகவல்களை சார்ந்தே அமைவதாகவும் தெரிவித்தார்.
மேலும், புலனாய்வு அமைப்புகள் பக்கபலமாக இல்லாவிட்டால், எந்த ராணுவ நடவடிக்கையும் வெற்றிகரமாக இருந்திருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார். உளவுத்துறை பணி என்பது கண்டிராத, கேட்டிராத, அறியப்படாத திரைமறைவு வேலைகளும், தகவல் பகுப்பாய்வும் சார்ந்தது என்றும், பின்னர் இது ஜேம்ஸ்பாண்ட் திரைபடங்களைப் போன்றது அல்ல என்றும் மனோஜ் நரவானே கூறினார்.