ஒருங்கிணைந்த இந்தியா’ என்ற பெயரில் மம்தா பானர்ஜி தலைமையில் மாநில எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் தொடங்கியது.
மாநில எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட பேரணி மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் இன்று நடைபெறுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, பா.ஜ.க-வுக்கு எதிராக, நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கும் ஒருமித்த கருத்துடைய கட்சிகள் கூடுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.இந்த அழைப்பை ஏற்று இன்று கொல்கத்தாவில் நடைபெறும் பேரணியில் பங்கேற்க ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்,தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா,திமுக தலைவர் மு.க ஸ்டாலின், லோக்தந்திரிக் ஜனதா தளம் கட்சித் தலைவர் சரத் யாதவ் உள்ளிட்ட பல தலைவர்கள் கொல்கத்தா சென்றனர்.
இந்த மாநாட்டுக்காக, ஏராளமானோர் இன்று காலையிலேயே பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தில் கூடியுள்ளனர். தொடர்ந்து தொண்டர்கள் வந்த வண்ணமே உள்ளனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஒருங்கிணைந்த இந்தியா’ என்ற பெயரில் கொல்கத்தாவில் பாஜகவுக்கு எதிராக, மம்தா பானர்ஜி தலைமையில் மாநில எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் தொடங்கியது..
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…
டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…
சென்னை : அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…
சென்னை : நேற்று மத்திய அரசு கல்வி உரிமை சட்டத்தில் (RTE) ஒரு முக்கிய திருத்தத்தை கொண்டு வந்தது. அதன்படி,…
சென்னை : வழக்கமாகவே படங்களில் வரும் காட்சிகளை மட்டும் பிரமாண்டமாக எடுக்காமல் படத்தில் இடம்பெறும் பாடல்களையும் பிரமாண்டமாக எடுப்பவர் தான் பிரம்மாண்டத்திற்கு…
சென்னை : மறைத்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 37-வது ஆண்டு நினைவு நாள் இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து,…