காப்பீட்டு தொகை ரூ.1 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்வு – டெபாசிட்டர்ஸ் ஃபர்ஸ்ட் திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

Default Image

டெல்லி:வங்கி வைப்பு தொகைகள் மீதான காப்பீட்டு தொகையை உயர்த்தும் டெபாசிட்டர்ஸ் ஃபர்ஸ்ட் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார்.

டெல்லி,விக்யான் பவனில் வங்கி வைப்புத் தொகைகளுக்கான காப்பீடு தொகையை உயர்த்தும் (Depositors First: Guaranteed Time-bound Deposit Insurance Payment up to Rs 5 Lakh)திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார்.இத்திட்டத்தின் மூலம் வங்கி வைப்பு தொகைகள் மீதான காப்பீட்டு தொகை ரூ.1 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும்,இத்திட்டத்தின் கீழ் பணத்தைத் திரும்பச் செலுத்த வங்கிகள் தவறிய டெபாசிட்தாரர்களுக்கு அடையாள காசோலைகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து,பேசிய பிரதமர் கூறியதாவது:

“நான் முதலமைச்சராக இருந்தபோது,வங்கி டெபாசிட் காப்பீட்டுத் தொகையை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை.

பல ஆண்டுகளாக,இந்த பிரச்சனைகளை கம்பளத்தின் கீழ் நழுவ விடும் மனோபாவம் நம் நாட்டில் நிலவியது.ஆனால் இன்றைய புதிய இந்தியா பிரச்சனைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துகிறது.அதன்படி,அவற்றைத் தீர்ப்பதில் தாமதம் இல்லாமல் பணிகள் நடைபெறுகிறது.அந்த வகையில்,தற்போது வங்கி வைப்பு தொகைகள் மீதான காப்பீட்டு தொகை ரூ.1 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,வங்கிகள் இணைப்பு பற்றி பேசிய பிரதமர், சிறிய வங்கிகளை,பெரிய வங்கிகளுடன் இணைக்கும்போது,அவற்றின் செயல்திறன் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும்,இத்திட்டம் தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில்:

“மொத்தம் 17 வங்கிகள் தங்கள் டெபாசிட்தாரர்களுக்கு பணத்தை திருப்பிச் செலுத்தவில்லை.இந்த நிலையில்,தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் ரூ.1 லட்சம் வைப்புத்தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப் பட்டுள்ளது.இதனால்,கிட்டத்தட்ட 98% டெபாசிட் கணக்குகள் பயனடையும்.

டெபாசிட் இன்சூரன்ஸ் கிரெடிட் திட்டத்தின் கீழ் 8-9 ஆண்டுகள் எடுக்கப்பட்ட காலம் தற்போது 90 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால்,வங்கிகள் மீது இந்தியர்கள் நம்பிக்கை வைக்க இது உதவும்”,என்று கூறினார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்