“Gone in 60” எனும் படத்தால் ஈர்க்கப்பட்டு, படத்தில் வருவதை போல திருடி மாட்டிக்கொண்ட நபர்!

Default Image

டெல்லியில் யாசின் என்பவர் Gone in 60 எனும் ஆங்கில படத்தால் ஈர்க்கப்பட்டு திருடி கைதாகியுள்ளார்.

தென் மேற்கு டெல்லியில் உள்ள சப்தர்ஜங் என்க்ளேவில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் ராஜீந்திர தாபா என்பவர் தனது பழைய பைக்கை ஆன்லைனில் விற்க முயன்ற போது திருடப்பட்டு விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஆன்லைனில் பழைய பைக் வாங்கிக் கொள்கிறோம் என்று வந்த விளம்பரத்தை பார்த்து பைக்கை விற்பனை செய்ய ஒப்புக்கொண்டேன், அப்பொழுது யாசின் என்பவர் என்னிடத்தில் வந்து நான் வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி என்னை சந்தித்து சோதனைக்காக ஓட்டி பார்ப்பதாக வாகனத்தை வாங்கி சென்றார்.

அதன் பின்பு அவர் பைக்கோடு காணாமல் போய் விட்டதாக புகார் அளித்துள்ளார். இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 30 வயதுகொண்ட யாசினை தேடும் பணியில் போலீசார் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். அப்பொழுது யாசின் நாங்லோய் நகரில் பிடிபட்டுள்ளார். இதுகுறித்து அவரிடம் விசாரித்த போது, அவர் பல கார்கள் மற்றும் மொபைல் போன்களை திருடிய நபர் என்பது தெரியவந்துள்ளது.Gone in 60 என்ற ஆங்கில திரைப்படத்தை பார்த்து ஈர்க்கப்பட்டதாக கூறியுள்ளார். அந்த படத்தில் உள்ள கதாநாயகன் தனது கூட்டாளிகளுடன் நினைத்த கார்களை அடுத்த நொடியே திருடி விடக் கூடிய ஒரு திருட்டு சம்பவம் கொண்ட படமாக அது உள்ளது.

இவருக்கு கூட்டாளிகள் யாரும் இல்லாததால் ஆன்லைனில் இருசக்கர வாகனங்களை வாங்கி கொள்வது போன்று விளம்பரம் செய்து வந்துள்ளார். அப்படி தன்னிடம் சிக்க கூடிய வாடிக்கையாளர்களிடம் நேரில் சென்று ஓட்டிப் பார்ப்பது போல வாங்கி அப்படியே திருடி செல்வது தான் இவரது வேலை. இது குறித்து அவரிடம் கேட்கும்போது அவர், Gone in 60 என்ற படத்தை பார்த்து தான் இவ்வாறு மாறியதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் அவரிடமிருந்து ஸ்கூட்டி ஒன்றும் சோதனையின்போது கண்டறியப்பட்டுள்ளது. விசாரணையில் இவரது முக்கியமான திருட்டு தளம் ஆன்லைன் தான் என்பது தெரியவந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்