பிரசாந்தி திருப்பதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார். அப்போது ஜெஸ்ஸி பிரசாந்தின் வருகையைக் கண்ட சியாம் சுந்தர் பணியின் அடிப்படையில் அவருக்கு சல்யூட் அடித்தார்.
ஆந்திரா காவல்துறையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஒய் சியாம் சுந்தர். இவரது மகளான ஜெஸ்ஸி பிரசாந்தி, 2018-இல் நடந்த காவலர் தேர்வில் வெற்றிபெற்று, துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். பணியின் அடிப்படையில் பார்த்தால் ஒய்பிரசாந்தி அவரது தந்தையை விட உயர் அதிகாரி.
இந்நிலையில், பிரசாந்தி திருப்பதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார். அப்போது ஜெஸ்ஸி பிரசாந்தின் வருகையைக் கண்ட சியாம் சுந்தர் பணியின் அடிப்படையில் அவருக்கு சல்யூட் அடித்தார். இந்த சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய நிலையில், தனது மகளுக்கு சல்யூட் அடித்த விவகாரம் தொடர்பாக அவர் கூறுகையில், தனக்கு இது பெருமையான விஷயம் என்றும், வீட்டில்தான் அப்பா-மகள் உறவு எல்லாம், பணியின்போது மகள் தனது உயர் அதிகாரி என்றும் பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து ஜெஸ்ஸி பிரசாந்தி அவர்கள் கூறுகையில், தனக்கு இது பெருமையான நிகழ்வு என கூறியுள்ளார்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…