INSAT-3DS : ஜிஎஸ்எல்வி எப்14 ராக்கெட் இன்று மாலை விண்ணில் பாய்கிறது!

INSAT-3DS Mission

இந்தியா விண்வெளி துறையில் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், இஸ்ரோ அடுத்தடுத்த செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பி உலக நாடுகளின் சாதனை பட்டியலில் இடம்பிடித்து வருகிறது. அந்தவகையில், குறிப்பாக கடந்தாண்டு அனைவருக்கும் எதிர்பார்ப்பை உண்டாக்கிய சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு சாதனை புரிந்தது.

நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தையும், தென் துருவத்தில் தரையிறங்கிய நாடுகளில் முதல் இடத்தையும் பதிவு செய்தது. சந்திரயான் 3 வெற்றி உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது. இதையடுத்து, நிலவை அடைந்த இந்தியா, சூரியனை தொட திட்டமிட்டது. அதன்படி, ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு, எல்1 புள்ளியில் நிலைநிறுத்தப்பட்டது.

டெல்லி விவசாயிகள் போராட்டம்.. பேச்சுவார்த்தையில் முக்கிய 3 கோரிக்கைகள்.!

இதுபோன்று, இஸ்ரோ அடுத்தடுத்த செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பி சாதனை புரிந்து வருகின்றனர். இதனிடையே வணிக ரீதியிலான செயற்கைகோள்களையும் இஸ்ரோ அனுப்பி வருகிறது. மேலும், வானியல் எச்சரிக்கை, பேரிடர் உள்ளிட்ட விண்வெளி சார்ந்த பல்வேறு விஷயங்களை குறித்து ஆய்வு செய்து முன்கூட்டியே தகவல்களை திரட்ட இஸ்ரோ பல்வேறு செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது.

அந்தவகையில், வானிலை மாற்றங்களை முன்கூட்டியே துல்லியமாக தெரிவிக்கக்கூடிய இன்சாட்-3டிஎஸ் (INSAT-3DS) என்ற அதிநவீன செயற்கைக்கோளை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி – எஃப்14 ராக்கெட் மூலம் இன்று மாலை விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ. அதாவது, வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக இஸ்ரோ வடிவமைத்த இன்சாட் – 3டி எஸ் செயற்கைகோளுடன் ஜிஎஸ்எல்வி – எஃப்14 (GSLV-F14) ராக்கெட் இன்று மாலை 5.35 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

இதற்கான கவுன்ட்-டவுன் நேற்று மதியம் 2.05 மணிக்கு (27.30 மணி நேரபடி) தொடங்கியது. இஸ்ரோ வடிவமைத்துள்ள இந்த அதிநவீன இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் 2,275 கிலோ எடை கொண்டது. இதில் 6 சேனல் இமேஜர் உட்பட 25 விதமான ஆய்வு கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளதாகவும், அவைகள் பூமியின் பருவநிலை மாறுபாடுகளை கண்காணித்து தகவலை வழங்கும் எனவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்