ஓய்வுபெற்ற நீதிபதியின் கீழ் விசாரணை.. மாவட்ட ஆட்சியரையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும்..இளம்பெண்ணின் சகோதரர்..!
ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் , ஹத்ராஸ் மாவட்ட ஆட்சியர் நீதவான் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என உயிரிழந்த சகோதரர் கோரிக்கை வைத்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் 19 வயது தலித் பெண் ஒருவர் கடந்த மாதம் 14-ந்தேதி 4 இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிக்சை பெற்றுவந்த அந்த இளம்பெண் கடந்த 29-ம் தேதி சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் தொடர்பாக 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து, விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக்குழு ஒன்றை அமைத்தும், மேலும் சிபிஐ விசாரணைக்கும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிந்துரை செய்துள்ளார்.
இந்த கொடூர சம்பவத்திற்கு பலர் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 1-ந்தேதி டெல்லியில் இருந்து உத்தரபிரதேசம் செல்ல முயன்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இருவரையும் உத்தரபிரதேச எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
பின்னர், விடுதலை செய்தனர். இதைத்தொடர்ந்து,
நேற்று ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் ஹத்ராஸ் செல்ல காவல்துறை அனுமதி கொடுத்தனர். அனுமதி கொடுத்ததை தொடா்ந்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினா்.