புதுமண தம்பதிகள் நோயாளி போல் வேடம்.! தடுத்து நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ்.!
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், நோயாளிகள் போல் வேடமிட்டு ஆம்புலன்சில் சென்ற புதுமண தம்பதிகள்.
கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதனால் அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டு, அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதன் விளைவாக பொதுமக்களின் இயல்பு வாழ்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்பவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தி தீவிர விசாணைக்கு பின் அவரச வேளைகளாக இருந்தால் மட்டுமே அவர்களை அனுமதிக்கப்படுகிறார்கள். இல்லையென்றால் அங்குள்ள முகாம்களில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.
அந்த வகையில், உத்தர பிரதேசத்தில் காசியாபாத் நகரில் இருந்து முசாபர்நகர் நோக்கி ஆம்புலன்ஸ் ஒன்று வேகமுடன் சென்று கொண்டிருந்தது. சந்தேகமடைந்த போலீசார் வாகன சோதனையின் பொழுது தடுத்து நிறுத்தி அதனை சோதனையிட்டு உள்ளனர். அந்த ஆம்புலன்சில் நோயாளிகள் போன்று வேடமிட்டு இருந்த ஆண் மற்றும் பெண்ணிடம் விசாரித்ததில் அவர்கள் புதுமண தம்பதி என தெரிய வந்துள்ளது. இதையடுத்து, ஆம்புலன்சில் இருந்த தம்பதியின் உறவினர்கள் 7 பேர் உள்பட 9 பேரும் கட்டாளி பகுதியில் உள்ள அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், புதுமண தம்பதியை அழைத்து வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.