ரிசர்வ் வங்கி புதுமை மையத்தின் தலைவராக இன்போசிஸ் நிறுவன இணைத்தலைவரான கிரிஸ் கோபால கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம், மத்திய வங்கி ரிசர்வ் வங்கி கண்டுபிடிப்பு மையத்தை அமைக்கவுள்ளதாக அறிவித்திருந்தது .இதன் மூலம் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி , நிதித்துறையில் புதுமைகளை மேம்படுத்தவும் ,புதுமையை வளர்க்கும் சூழலையும் உருவாக்க உள்ளதாக தெரிவித்தது .
இந்த நிலையில் தற்போது ரிசர்வ் வங்கியின் புதுமை மையத்தின்(innovation hub) தலைவராக கிரிஸ் கோபால கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார் .இவர் இன்போசிஸ் நிறுவனத்தின் இணை தலைவராக இருந்து தற்போது இணை நிறுவனராக உள்ளார் .ஸடார்ட் அப்-களுக்கான மையமான ஸ்டார்ட் அப் வில்லேஜின் தலைமை வழிக்காட்டியாகவும் உள்ளார் .ஒரு தலைவர் தலைமையிலான ஆளும் குழுவால் வழிநடத்தப்பட்டு ரிசர்வ் வங்கி நிர்வகிக்கப்படும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.மேலும் இது சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கி ,நிதி சேவைகளை மேம்படுத்தி,நிதி சேர்க்கையை ஊக்குவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரிசர்வ் வங்கியின் புதுமை மையத்தின் ஆளும் குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்கள் , மெட்ராஸ் ஐஐடி பேராசிரியரான அசோக் ஜுன்ஜுன்வாலா , பெங்களூர் ஐஐஎஸ்சி நிறுவன முதன்மை ஆராய்ச்சி விஞ்ஞானி எச்.கிருஷ்ணமூர்த்தி , கேப்பிட்டல் பண்ட்ஸ் ,டிவிஎஸ் நிறுவன தலைவரும் , நிர்வாக இயக்குநருமான கோபால் ஸ்ரீனிவாசன் , சிண்டிகேட் வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் மிருத்யுஞ்சய் மஹாபத்ரா , ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குநர் டி.ரபி ஷங்கர் உள்ளிட்ட பலர் இடம் பெற்றுள்ளனர் .
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…