இந்த வருடத்தில் நடக்கவிருந்த NEET மற்றும் JEE தேர்வுகள் ஒத்திவைக்கப்படலாம் என தகவல்!
இந்த வருடத்தில் நடக்கவிருந்த NEET மற்றும் JEE தேர்வுகள் ஒத்திவைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் தான் உள்ளது. இந்நிலையில் நீட் தேர்வு மற்றும் ஜேஇஇ ஆகிய தேர்வுகள் இந்த வருடம் ஒத்தி வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக நீட் தேர்வு மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சுகாதார அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னரே தேர்வு ஒத்திவைப்பு தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் 25ஆம் தேதிக்கு பிறகு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.