3கோடி ரயில் பயணிகளின் தகவல் ஆன்லைனில் விற்பனை.! வெளியான அதிர்ச்சி தகவல்.!
3 கோடி ரயில் பயணிகளின் தகவல்களை, ஹேக்கர் ஆன்லைனில் விற்பனைக்கு வைத்துள்ளார் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ரயில்வேயின் டேட்டா பேசில் ஹேக்கிங் நடைபெற்றுள்ளது, 3 கோடி பயணிகளின் தகவல்களை ஹேக்கர் ஒருவர் ஆன்லைனில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளார் என தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிழல் ஹேக்கர் எனும் பெயருடைய அந்த நபர், 3 கோடி பயணிகளின் பெயர்கள், இ-மெயில், முகவரி, மொபைல் எண், உள்ளிட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
ஹேக்கர் வெளியிட்டுள்ள பதிவில், முக்கிய பிரபலங்கள், அரசு பணியாளர்கள் போன்றவர்களின் தகவல்கள் இருப்பதாக கூறியுள்ளார். அவர் வெளியிட்ட ஸ்கிரீன் ஷாட்டில், இந்தியன் ரயில்வேயில் பயணிகளின் பயண வரலாறும், இன்வாய்ஸ் பில்லும் பகிர்ந்துள்ளார்.