தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட இண்டிகோ விமான சேவை சீரானது …!
தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாடு முழுவதும் பாதிக்கப்பட்டிருந்த இண்டிகோ விமான சேவை சீரானது என்று இண்டிகோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இன்று மாலை இந்தியா முழுவதும் அனைத்து விமான நிலையங்களிலும் இண்டிகோ விமான சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியது.இதனால் பயணிகள் இண்டிகோவின் ட்விட்டர்,பேஸ்புக் மற்றும் இணையதளத்தில் தொடர்பு கொண்டு பயணிகள் தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்தது.மேலும் பொறுமை காத்து ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் தெரிவித்தது.
இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாடு முழுவதும் பாதிக்கப்பட்டிருந்த இண்டிகோ விமான சேவை சீரானது என்று இண்டிகோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.