தெலுங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த நிறைமாத கர்பிணியான சாவித்திரி என்பவர் பிரசவத்திற்காக அச்சம் பேட்டை மண்டல அரசு மருத்துவமனையில் கடந்த 18-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அன்று இரவு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு பிரசவம் பார்த்த மருத்துவர், குழந்தையை வெளியே எடுக்க முயற்சித்தார். அப்போது குழந்தையின் தலை, அதன் உடலில் இருந்து துண்டாகியுள்ளது. ஆனால், இதை சாவித்ரியின் உறவினர்களிடம் மறைத்த மருத்துவர், தாயின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என கூறி ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு தெரிவித்தார்.
அதை தொடர்ந்து அங்கு அனுமதிக்கப்பட்ட கர்பிணிக்கு பிரசவம் பார்த்த மருதுவர்கள், சிசுவின் உடல் மட்டுமே தாயின் கர்ப்பப்பையில் இருப்பதாகவும், தலை வெட்டப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள், அச்சம் பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மருத்துவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவரின் கவனக்குறைவால், பத்து மாதம் சுமந்த சிசுவின் தலையும், உடலும் துண்டாகி இறந்த நிகழ்வு உறவினர்களையும், அப்பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் இன்று மோதின. துபாயில் நடைபெற்ற இப்போட்டியில்…
சென்னை : மும்மொழி கொள்கை பற்றிய பேச்சுக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுபொருளாகி உள்ள நிலையில், பாஜக மாநில…
பனாமா : அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் பனாமாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிலர் ஜன்னல்…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் இன்று மோதுகின்றன. துபாயில் நடைபெற்று வரும் …
சென்னை : ராமேஸ்வரத்தை சேர்ந்த மேலும் 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று நடுக்கடலில் கைது செய்துள்ளனர். இலங்கை கடல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, கடந்த பிப்., 2ம் தேதி சென்னை பனையூரில்…