விலை போகாத பிரதமருக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருள்கள்…!
பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருள்கள் பல ஏலம் போகவில்லை என கூறப்படுகிறது.
பிரதமர் மோடிக்கு வெளிநாட்டு தலைவர்கள், விருந்தினர்கள் தனக்கு வழங்கிய பரிசு பொருட்களை ஏலம் விட்டு அந்த நிதியை அரசின் திட்டங்களுக்கு பிரதமர் மோடி வழங்கி வருகிறார் அதன்படி இந்த ஆண்டு பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 1,300-க்கும் மேற்பட்ட பரிசுப் பொருள்கள் கடந்த 17ஆம் தேதி இணையதளம் மூலம் ஏலம் நடைபெற்றது.
இந்த ஏலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் வைத்திருக்க வைக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருள்கள் வாங்க யாரும் முன் வரவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால் 162 பொருள்கள் மட்டுமே யாரும் வாங்கவில்லை என கலாச்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் தாங்கள் பயன்படுத்திய விளையாட்டு பொருள்களை பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கினர்.
அதில், சில பொருட்களுக்கு ஏலத்தில் போட்டி கடுமையாக இருந்தது. ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா பயன்படுத்திய ஈட்டி ரூ.1 கோடிக்கு விலை நிர்ணயிக்கப்பட்டு ரூ.1.50 கோடிக்கு ஏலம் போனது. ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டை வீராங்கனை லாவ்லினா பயன்படுத்திய கிளவுஸ் ரூ.80 லட்சத்துக்கும், ஆடவர், மகளிர் ஹாக்கி வீரர்கள் பயன்படுத்திய அவர்கள் கையொப்பமிட்ட ஹாக்கி மட்டைகள் ஒவ்வொன்றும் ரூ.80 லட்சத்துக்கு விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அதையும் வாங்க ஆர்வம் யாரும் காட்டவில்லை என கூறப்படுகிறது.