ஐஎன்டியுசி தேசிய பொதுச் செயலாளராக டாக்டர் அ.அமீர்கான் நியமனம்.!
ஐ.என்.டி.யு.சி-வுக்கு தேசிய பொதுச் செயலாளராக தென்காசியை சேர்ந்த டாக்டர் அ.அமீர்கான் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய காங்கிரஸ் கட்சியின் கீழ் செயல்படும் ஐ.என்.டி.யு.சி எனப்படும் இந்திய தேசிய தொழிற்சங்க அமைப்புக்கு அண்மையில் முக்கிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
அதன்படி, தற்போது தென்காசி மாவட்டம் பொட்டல்புதூரைச் சேர்ந்த டாக்டர் அ.அமீர் கான் என்பவரை (INTUC) இந்திய தேசிய தொழிற்சங்கத்தின் தேசிய பொதுச் செயலாளராக, (INTUC) தேசியத் தலைவர் சுவாமிநாத் ஜெய்ஸ்சுவால் நியமித்துள்ளார்.