இந்தூரைச் சேர்ந்த ஒரு பெண் போக்குவரத்து சிக்னலில் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தூரில் பரபரப்பான சாலைகளில் ஒன்றான ரசோமா சதுக்கத்தில் இந்த நடன வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரேயா கல்ரா என்ற ஒரு பெண் மாடல், 30 வினாடி வீடியோவில் நடனமாடியுள்ளார். அங்கிருந்த சிக்னல் சிவப்பு நிறம் அடைந்தவுடன், அந்த பெண் திடீரென்று ஜீப்ரா கிராசிங்கில் ஆட ஆரம்பித்துள்ளார். அந்த பெண்ணுடன் இருந்த நபர் ஒருவர், அந்த பெண்ணின் நடனத்தை வீடியோவாக எடுத்துள்ளார்.
சிக்னல் விளக்குகள் மீண்டும் பச்சை நிறமாக மாறும் வரை சிக்னலில் ஸ்ரேயா நடனமாடியுள்ளார். மேலும் தனது வீடியோ மூலம் முகமூடி அணியுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் போக்குவரத்து விதிமீறலுக்கான நோட்டீஸை அதிகாரிகள் வழங்கியுள்ளனர். இது குறித்து தெரிவித்துள்ள டிஎஸ்பி, மற்றவர்களுக்கு அல்லது உங்களுக்கு தீங்கு விளைவிக்காத பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை மட்டுமே செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, ஸ்ரேயா கல்ரா தனது சமூக ஊடகத்தில் எடுத்த வீடியோவை உருவாக்கியதன் நோக்கத்தை தெளிவுபடுத்தினார். மேலும், போக்குவரத்து விதிகளை மீறும் நோக்கத்தில் இதை எடுக்கவில்லை என்றும், முகமூடி அணிவது மற்றும் சிவப்பு விளக்கில் வாகனங்களை நிறுத்தி வைப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மட்டுமே இதை செய்ததாக தெரிவித்துள்ளார்.
வேறு யாரையும் பாதிக்கும் நோக்கத்தில் நான் இதை செய்ய விரும்பவில்லை. மேலும், இந்த வீடியோ தவறான வழியில் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…