இந்தியா – ரஷியா இடையே ஏ.கே. 47-203 ரக துப்பாக்கிகள் தயாரிப்பதற்கான முக்கிய ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது என்று ரஷ்ய அதிகாரப்பூர்வ செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாஸ்கோவிற்கு தொடர்ந்து வருகை தந்திருந்தபோது, இந்தியாவில் ஏ.கே.47-203 ரக துப்பாக்கிகளை தயாரிப்பதற்கான முக்கிய ஒப்பந்தத்தை இந்தியாவும் ரஷ்யாவும் இறுதி செய்துள்ளதாக ரஷ்ய அதிகாரப்பூர்வ செய்தி ஊடகம் வெளியிட்டுள்ளது. இந்த AK-47 203 ரக துப்பாக்கி என்பது AK-47 துப்பாக்கியின் மற்றோரு புதிய பரிமாணம் என்றும் இது மிகவும் சிறப்பம்சம் கொண்டவை என்றும் கூறப்படுகிறது. இது இந்திய சிறிய ஆயுத அமைப்பு (INSAS) 5.56×45 மிமீ தாக்குதல் துப்பாக்கியை மாற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்திற்கு சுமார் 770,000 ஏகே-47 203 ரக துப்பாக்கிகள் தேவை அவற்றில், 100,000 இறக்குமதி செய்யப்படும் என்றும் மீதமுள்ளவை இந்தியாவில் தயாரிக்கப்படும் என்று ரஷ்யாவின் அரசு சார்ந்த செய்தி ஊடகம் கூறியுள்ளது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் வெற்றியை உறுதி செய்வதற்காக, எங்கள் ministry of diffence-வுடன் தீவிரமாக ஈடுபடுவதற்கான ரஷ்ய தரப்பின் உறுதிப்பாட்டை ஜெனரல் ஷோயுக் மீண்டும் வலியுறுத்தினார். இந்தோ-ரஷ்யா ரைஃபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் (IRRPL) என்ற கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக இந்த புதிய ரக துப்பாக்கிகள் இந்தியாவில் தயாரிக்கப்படும்.
இராணுவ ஏற்றுமதிக்கான ரஷ்ய அரசு நிறுவனமான ஆர்ட்னன்ஸ் தொழிற்சாலை வாரியம் (OFB), கலாஷ்னிகோவ் மற்றும் ரோசோபொரான் ஆகியவற்றுக்கு இடையே நிறுவப்பட்டுள்ளது. IRRPL இல் 50.5% பெரும்பான்மை பங்குகளும், கலாஷ்னிகோவ் குழுமத்திற்கு 42% பங்குகளும், ரோசோபொரோனெக்ஸ்போர்ட் மீதமுள்ள 7.5% பங்குகளை வைத்திருக்கும் என்று தெரிவித்துள்ளனர். இதனிடையே, 7.6239 மிமீ ரஷ்ய ஆயுதம், உத்தரப்பிரதேசத்தின் கோர்வா ஆர்ட்னன்ஸ் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும். இது கடந்த ஆண்டு பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த புதிய ரக துப்பாக்கியின் விலை 1,100 அமெரிக்க டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தொழில்நுட்ப பரிமாற்ற செலவு மற்றும் உற்பத்தி அலகு போன்றவை அடங்கும். இதனைத்தொடர்ந்து, 1996 முதல் பயன்பாட்டில் உள்ள ஐஎன்எஸ்ஏஎஸ், இமயமலையில் அதிக உயரத்தில் ஜாம்மிங் மற்றும் கிராக்கிங் போன்ற சில சிக்கல்களை உருவாக்கியுள்ளது என்றும் அந்நாட்டு அரசு சார்ந்த ஊடகம் ஸ்பூட்னிக் அறிக்கையில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
டெல்லி : பிரதமர் மோடி அமெரிக்க விஞ்ஞானி லெக்ஸ் பிரிட்மெனின் பாட்காஸ்டர் லெக்ஸ் ஃப்ரிட்மேனுடனான நேர்காணலில் கலந்து கொண்டபோது பல விஷயங்களை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக முன்னெடுத்தது. சபாநாயகர் அப்பாவு திமுகவுக்கு…
கலிபோர்னியா : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்கலம் மூலம்…
திருச்சி : தமிழ்நாடு அரசு PM Shri திட்டத்தை ஏற்றுக்கொண்டால் மட்டுமே பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்க வேண்டிய நிதியை அளிக்க முடியும்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று (மார்ச்.17)…
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை…