இந்திய-சீன எல்லை விவகாரம்: 8ஆம் கட்ட பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமானவை – இந்தியா.!
இந்திய மற்றும் சீனப் படைகளின் 8ஆம் கட்ட பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது என இந்தியா தெரிவித்துள்ளது.
லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளின் எல்லையில் இராணுவ படைகளை குவித்ததால் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், படைகளை குறைக்கவும், பதற்றத்தை தணிக்கவும், ராணுவ தளபதிகிடையே தொடர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இதுவரை 7 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளநிலையில், இதனை தொடர்ந்து 8-ஆம் கட்ட பேச்சுவார்த்தை கிழக்கு லடாக்கில் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில், லடாக் நிலைப்பாடு குறித்த 8-ஆம் கட்ட இராணுவ பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமானவையாக இருந்தது என்று இந்திய ராணுவம் இன்று கூறியது. எனினும், இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. ஆகவே, அடுத்த கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.