ஆளுநர் மற்றும் முதலமைச்சர் இடையேயான மோதல் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியில் அம்மாநில முதல்வர் நாராயணசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இடையே அதிகாரப்போர் நடைபெற்று வருகிறது.நாளைடைவில் இருவருக்கும்மிடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று மீண்டும் ஒரு பரபரப்பு தகவலை அம்மாநில முதல்வர் நாராயணசாமி கூறினார்.அவர் கூறுகையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அலுவலகம் ஊழலுக்கு உடந்தையாக உள்ளது.அதேபோல் ஆளுநர் அலுவலகம் சமூக பொறுப்புணர்வு நிதியை முறைகேடாக செலவு செய்துள்ளது.அதாவது 85 லட்சம் நிதி முறைகேடு என்று பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.
இதன்பின்னர் அம்மாநில முதல்வர் நாராயணசாமி கருத்துக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மறுப்பு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறுகையில், புதுச்சேரி ஆளுநர் அலுவலகத்தில் இருந்து எந்த பணப்பரிமாற்றமும் செய்யப்படுவதில்லை என்று விளக்கம் அளித்தார்.
துணைநிலை ஆளுநர் மீதான முதலமைச்சரின் குற்றச்சாட்டும், அதற்கு ஆளுநரின் பதிலடியும், புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை
ஏற்படுத்தி உள்ளது.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…
சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…
ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்கனவே, இரு அணிகளும் 5 போட்டிகள் மோதிக்கொள்ளும்…