ஊரடங்கு நேரத்தில் ரத்து செய்யப்பட்ட டிக்கெட்- பணத்தை திருப்பி கொடுக்கும் இன்டிகோ நிறுவனம்!
கொரோனா ஊரடங்கு காலத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்ட பொழுது விமானம் டிக்கெட்டுகளுக்கு முன்பதிவு செய்து ரத்து செய்யப்பட்ட விமான பயணிகளுக்கு இண்டிகோ நிறுவனம் பணத்தை திருப்பித்தர தற்பொழுது முன்வந்துள்ளது.
கடந்த ஒரு வருட காலங்களாகவே உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தொற்று வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் முதலே கொரோன தொற்று ஏற்பட்டதையடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போக்குவரத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டது. அதுபோல விமான சேவைகளும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் விமானத்திற்கு முன்பதிவு செய்திருந்த பயணிகளின் விமான டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டதால் பலர் தங்களது பணத்தை இழக்கும் நிலை ஏற்பட்டது.
தற்பொழுது இண்டிகோ விமான நிறுவனம் ஊரடங்கு நேரத்தில் பயணிகளின் டிக்கெட் ரத்து செய்யப்பட்டு இருந்தால் திருப்பி பயணம் செல்வதற்கு பதிலாக ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கான பணத்தை கொடுக்க முன்வந்துள்ளது. இதற்காக கிரெடிட் செல் எனும் ஒருபயன்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் 2021 ஜனவரி மாதத்திற்குள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளின் பணத்தை திருப்பி பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இதுவரையில் சுமார் ஆயிரம் கோடி அதாவது 90 சதவீதம் ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு பணம் திருப்பிக் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.