என்னோட சீட்டு எங்கே..? விமானத்தில் தனது இருக்கையை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணி
Indigo: இண்டிகோ விமானத்தின் இருக்கை சேதமடைந்து இருக்கும் புகைப்படத்தை பயணி ஒருவர் பகிர்ந்து கேள்வி எழுப்பிய நிலையில் விமான நிறுவனம் அது குறித்து விளக்கமளித்துள்ளது. பெங்களூரில் இருந்து போபாலுக்கு நேற்று கிளம்பிய இண்டியோ விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் பதிவு ஒன்றை எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார்.
அதில், 6E 6465 என்ற எண் கொண்ட விமானத்தில், அமரும் இருக்கைகள் இல்லாமல் மிக கடுமையாக சேதமடைந்து இருப்பதாக புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார், மேலும் “நான் பாதுகாப்பாக தரையிறங்குவேன் என்று நம்புகிறேன்” என்றும் தெரிவித்திருந்தார். இந்த பதிவை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் இண்டிகோ நிறுவனத்தை விமர்சித்து வந்தனர்.
Read More – நாட்டையே உலுக்கிய புதுச்சேரி சிறுமி கொலை..! கைதான இருவருக்கும் 15 நாள் நீதிமன்றக் காவல்
இந்த நிலையில் புகாருக்கு விளக்கமளித்த இண்டிகோ நிறுவனம், “துப்புரவு நோக்கங்களுக்காக விமானத்திற்கு முன் இருக்கை மெத்தைகள் மாற்றப்பட்டன. இருக்கைகள் குறித்து, எங்களது பணியாளர்கள் பயணிக்கு முன்னதாகவே தெரிவித்தனர். தூய்மை பணியின் போது இதுபோன்ற செய்வது வழக்கமான நடைமுறை தான். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிக உயர்ந்த, தரமான, தூய்மை மற்றும் சுகாதாரத்தை வழங்குவதில் உறுதியாக உள்ளோம்” என தெரிவித்துள்ளது.
Beautiful @IndiGo6E — I do hope I land safely! 🙂
This is your flight from Bengaluru to Bhopal 6E 6465. pic.twitter.com/DcPJTq3zka— Yavanika Raj Shah (@yavanika_shah) March 6, 2024