Categories: இந்தியா

நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்..!

Published by
செந்தில்குமார்

பெங்களூரில் இருந்து வாரணாசி புறப்பட்ட இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பெங்களூரில் இருந்து வாரணாசி புறப்பட்ட இண்டிகோ விமானம் இன்று காலை 6.15 மணியளவில் தெலுங்கானாவில் உள்ள ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் நடுவானில் ஏற்பட்டத் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது. இந்த விமானத்தில் 137 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

இதுகுறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ), தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது என்றும் விமானத்தில் பயணம் செய்த 137 பயணிகளும் பத்திரமாக உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் டிஜிசிஏ தெரிவித்துள்ளது.

சமீபத்தில், துபாய் நோக்கிச் சென்ற பெட்எக்ஸ் (FedEx) விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பறவை மோதியதால், டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி! 

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

2 hours ago

திருப்பதி கோயிலில் முட்டி போட்டு நேர்த்திக் கடன் செலுத்திய நிதிஷ் ரெட்டி!

திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…

3 hours ago

ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை கிடைக்குமா? அமைச்சர் மூர்த்தி பதில்!

மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…

3 hours ago

பொங்கல் ஸ்பெஷல் : தென்மாவட்ட மக்களுக்காக சிறப்பு ரயில்களை அறிவித்த ரயில்வே!

சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…

4 hours ago

கரும்பு சாறில் பொங்கல் செய்யலாமா?. அது எப்படிங்க.?

சென்னை :கரும்புச்சாறை   வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்  காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…

5 hours ago

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பொங்கல் வாழ்த்து கூறிய அஜித்குமார்!

சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…

7 hours ago