பறவை மோதியதால் மீண்டும் மும்பைக்கு சென்ற இண்டிகோ விமானம்..!
மும்பையில் இருந்து டெல்லிக்கு இயங்கி வந்த இண்டிகோ விமானம் இன்று காலை பறவை மோதியதால் மீண்டும் மும்பைக்கு சென்றது.
இண்டிகோ விமானம் 6E5047 காலை 8 மணியளவில் மும்பையிலிருந்து புறப்பட்டு காலை 10.15 மணிக்கு டெல்லியில் தரையிறங்க திட்டமிடப்பட்டது. ஆனால், மும்பையில் இருந்து விமானம் செல்லும்போது வழியில் பறவை மோதியதால் மீண்டும் விமானம் மும்பைக்கு திரும்பி சென்றது.