நாடு முழுவதும் முடங்கியது இண்டிகோ விமான நிறுவனத்தின் சேவை …!
தொழில்நுட்ப கோளாறு காரணமாக, நாடு முழுவதும் இண்டிகோ விமான நிறுவனத்தின் சேவை முடங்கியது.
இது தொடர்பாக இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்ட தகவலில்,இந்தியா முழுவதும் அனைத்து விமான நிலையங்களிலும் தங்களது விமான சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியுள்ளது.இதனால் பயணிகள் இண்டிகோவின் ட்விட்டர்,பேஸ்புக் மற்றும் இணையதளத்தில் தொடர்பு கொண்டு பயணிகள் தகவல்களை தெரிந்து கொள்ளலாம். பொறுமை காத்து ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.