இந்தியாவின் தொழில்நுட்ப மாற்றம்… குடியரசு தினத்தை கொண்டாடும் கூகுள்!

Google Doodle

இந்திய நாட்டின் 75-வது குடியரசு தினம் இன்று நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. குடியரசு தின விழாவையொட்டி தலைநகர் டெல்லியில் கடமை பாதையில் குடியரசு தலைவர் திரௌவுபதி முர்மு மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இவ்விழாவில், பிரதமர் மோடி, சிறப்பு விருந்தினர் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், முப்படை தளபதிகள் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதுபோன்று, மாநிலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், அந்தந்த மாநில ஆளுநர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினர். இதனிடையே, இந்தியாவின் 75வது குடியரசு தினத்துக்கு, மற்ற நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இந்திய குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டும் வருகிறது.

இந்த நிலையில், நாட்டின் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு அனலாக் டிவிகளின் காலத்தில் இருந்து ஸ்மார்ட் போன்களுக்கு மாறும் இந்தியாவின் பயணத்தை வெளிப்படுத்தும் விதமாக சிறப்பு டூடுலை கூகுள் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. முதலில் இந்தியா, டிஜிட்டல் மாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் முந்தைய தலைமுறை கண்ட தொலைக்காட்சியை பதிவிட்டு அதனை கருப்பு – வெள்ளை நிறம் படமாக இருக்கிறது.

டெல்லியில் தேசிய கொடியை ஏற்றினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!

இது தொலைக்காட்சி தொழில்நுட்பத்தின் ஆரம்ப காலத்தை குறிக்கிறது. இரண்டாவது தொலைக்காட்சியில் ஒட்டக ஊர்வலகம் வண்ண நிறத்தில் காட்டப்பட்டுள்ளது. இது இந்தியாவின் நவீன தொழில்நுட்ப மாற்றத்தை குறிக்கிறது. அதில், சிறப்பு கலைஞர் விருந்தா ஜவேரி உருவாக்கிய கலைப்படைப்பு, பல ஆண்டுகளாக இந்தியாவின் குடியரசு தின அணிவகுப்பின் காட்சி மாற்றத்தை உள்ளடக்கி உள்ளது.

அதனைத்தொடர்ந்து, தொழில்நுட்ப வளர்ச்சியால் தற்போது நாம் பெற்றிருக்கும், ஸ்மார்ட்போனையும் பதிவிட்டு தனது குடியரசுதின வாழ்த்துக்கள் பதிவு செய்துள்ளது. அதில், 2013ம் ஆண்டில், குடியரசு தினம் முதல் முறையாக யூடிப்பில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது என குறிப்பிட்டுள்ளது.

எனவே, இந்த டூடுலில் google என்ற வார்த்தையை முதலில் இடம்பெற்றுள்ள அனலாக் தொலைக்காட்சியில் கூகுளின் ‘ஜி’யை இணைத்துள்ளது. அதன்படி, தொலைக்காட்சிப் பெட்டிகளின் திரைகள் ‘GOOGLE இன் ‘O’க்களையும், மீதமுள்ள எழுத்துக்கள் ‘G,’ ‘L,’ மற்றும் ‘E’  ஸ்மார்ட்போன் திரையிலும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்