இந்தியாவில் இரண்டாவது பிளாஸ்மா வங்கி இன்று தொடக்கம்!
இந்தியாவில் இரண்டாவது பிளாஸ்மா வங்கி இன்று தொடக்கம்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பிளாஸ்மா சிகிச்சை மூலம், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிக்கும் முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பிளாஸ்மா சிகிச்சை என்பது, ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கபட்டு குணமடைந்தோரின் ரத்தத்தில் இருந்து பிளஸ்மா எடுத்து அதை பாதிக்கப்பட்டோர் உடலில் செலுத்தி சிகிச்சை அளிப்பதற்கு பிளாஸ்மா சிகிச்சை என அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், டெல்லியில், முதல் பிளாஸ்மா வாங்கி செயல்படுத்தப்பட்டு வருகிற நிலையில், சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், ரூ. 2 கோடி மதிப்பீட்டில் இரண்டாவது பிளாஸ்மா வங்கி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வங்கியை தமிழக சுகாதார அமைச்சர் விஜய பாஸ்கர் திறந்து வைக்க உள்ளார்.