3டி அச்சிடப்பட்ட இரண்டாவது தனியார் ராக்கெட் இஞ்சின் சோதனை வெற்றி.!
இந்தியாவின்3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதனை செய்தது
தெலுங்கானா: இந்தியாவின் முதன்மையான தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ், சுமார் 200-விநாடிகளுக்கு அதன் இரண்டாவது, தவான்-II என்ற மேம்பட்ட முழு 3டி-அச்சிடப்பட்ட கிரையோஜெனிக் இஞ்சினை வெற்றிகரமாக இயக்கியுள்ளது.
Excited to announce the triumphant 200-second fire-endurance test of our enhanced, fully 3D-printed ‘Dhawan-II’ Cryogenic engine that will power the upper stage of Vikram-2.
This is a major milestone for our cryogenic program, fuelling the accelerated development of Vikram… pic.twitter.com/LmZOAVqOXQ
— Skyroot Aerospace (@SkyrootA) April 4, 2023
கடந்த 2021 நவம்பரில் சோதனை செய்யப்பட்ட தவான்-I இன்ஜினைத் தொடர்ந்து, ஸ்கைரூட் மூலம் வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்ட இரண்டாவது கிரையோஜெனிக் ராக்கெட் இதுவாகும். மேலும், 2024-ல் ராக்கெட்டுக்கான 3D-அச்சிடப்பட்ட கிரையோஜெனிக் இயந்திரத்தை சோதனை செய்கிறது.
நேற்று சோதனை செய்யப்பட்ட இந்த கிரையோஜெனிக் இன்ஜின், மேம்படுத்தப்பட்ட விக்ரம்-II பதிப்பின் மேல் கட்டமாக பயன்படுத்தப்படும். திட எரிபொருள் நிலைக்கு பதிலாக கிரையோஜெனிக், மேல் நிலை ராக்கெட்டின் பேலோட் சுமந்து செல்லும் திறனை அதிகரிக்கிறது.
இதற்கிடையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம், இந்த தனியார் நிறுவனம், ‘விக்ரம் – எஸ்’ என்ற பெயரில் ராக்கெட் தயாரித்து, இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ‘விக்ரம் – எஸ்’ ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது.
விக்ரம்-1 ராக்கெட், இந்நிறுவனம் தயாரித்து வரும் ராக்கெட்டுகளின் வரிசையில் முதன்மையானது. இது செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதைக்கு எடுத்துச் செல்ல மூன்று திட எரிபொருள் நிலைகளைப் பயன்படுத்துகிறது.
ஸ்கைரூட் தனது முதல் சுற்றுப்பாதை விமானத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும், புதுப்பிக்கப்பட்ட விக்ரம் II ராக்கெட் அடுத்த ஆண்டுக்குள் ஏவுவதற்குத் தயாராக இருக்கும் என்றும் கூறியுள்ளது.