இந்திய குடியரசு தினம் விழா… பிரான்ஸ் நாட்டு வீரர்கள் பங்கேற்பு!
நாட்டின் 75-ஆவது குடியரசு தின விழா இன்று இந்தியா முழுவதும் உற்சாகத்துடன் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் அந்தந்த மாநில ஆளுநர்கள் மற்றும் தலைவர்கள் மூவர்ண தேசிய கொடியை ஏற்று வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும், அரசு சார்பில் அலங்கார ஊர்திகள் என பல்வேறு நிகச்சிகள் நடைபெற்று வருகிறது.
அந்தவகையில், தலைநகர் டெல்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குடியரசு தினவிழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌவுபதி முர்மு பங்கேற்று தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.
இதன்பின், கடமைப்பதையில் நடைபெறும் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை குடியரசு தலைவர் ஏற்றுக் கொள்கிறார். இதன்பின் அங்கு பல்வேறு மாநில பன்மை தன்மையை பிரதிபலிக்கும் பிரமாண்ட அலங்கார ஊர்திகள் நடைபெறும். இவ்விழாவில், பிரதமர் மோடி மற்றும் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
டெல்லியில் இன்று நடைபெறும் குடியரசு தின விழா…தேசிய கொடியை ஏற்றவுள்ள ஜனாதிபதி!
இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் மேக்ரோன் பங்கேற்பதன் மூலம், சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் பிரான்சை சேர்ந்த 6வது அதிபர் என்ற சிறப்பை பெறுகிறார். எனவே, குடியசு தினத்தையொட்டி டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், டெல்லியில் நடைபெறும் இந்திய குடியரசு தின விழாவில் பிரான்ஸ் நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பங்கேற்கும் நிலையில், அணிவகுப்பில் அந்நாட்டு வீரர்களும் பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு விருந்தினராக உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பது வழக்கம். இந்த ஆண்டு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பங்கேற்கிறார். இதனால் அந்நாட்டின் வீரர்களும் இந்திய குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கின்றனர். அதன்படி, குடியரசு தின அணிவகுப்பு நிகழ்வில், 95 பேர் கொண்ட அணிவகுப்பு குழுவும், 35 பேர் கொண்ட இசைக்குழுவும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.