ரஷ்யாவுடனான இந்திய உறவு காலம் காலமாக வலுப்படுத்தப்பட்ட ஒன்று-பிரதமர் மோடி

ரஷ்யாவுடனான இந்திய உறவு காலம் காலமாக வலுப்படுத்தப்பட்ட ஒன்று என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார்.விளாடிவாஸ்டாக் நகரில் இந்திய பிரதமர் மோடி-ரஷ்ய அதிபர் புடின் முன்னிலையில் இந்தியா-ரஷ்யா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது.இதன் பின்னர் பிரதமர் மோடி பேசுகையில்,ரஷ்யாவின் மிக உயர்ந்த சிவில் விருது எனக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளீர்கள், இது இருநாடுகளின் மக்களுக்கு இடையிலான நட்பு உறவை நிரூபிக்கிறது.இது 1.3 பில்லியன் இந்தியர்களுக்கும் மரியாதைக்குரிய விஷயம்.
ரஷ்யாவுடனான இந்திய உறவு காலம் காலமாக வலுப்படுத்தப்பட்ட ஒன்று . இரு நாடுகளிடையே 25 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.அரசு மற்றும் தனியார் துறை இரு நாடுகளின் உறவை பலப்படுத்தி உள்ளன.ஏ.கே-203 துப்பாக்கி இருநாடுகளும் இணைந்து தயாரிக்கும். ரஷ்ய உதவியுடன் விண்வெளியில் புதிய உச்சத்தை இந்தியா எட்டும் என்று பேசினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025