விண்ணில் சீறிப்பாய்ந்தது இந்தியாவின் PSLV C-59 ராக்கெட்!

சூரிய ஒளிவட்டப் பாதையை ஆய்வு செய்வதற்கான 2 செயற்கைக் கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

ஆந்திரப் பிரதேசம்: ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி C-59 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட் நேற்று விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில், ப்ரோபா 3 செயற்கைக்கோளில் கண்டறியப்பட்ட தொழில் நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று மாலை 4:06 மணிக்கு ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் புரோபா-3, கரோனா கிராப் ஆகிய செயற்கைக்கோள்கள் சுமந்துகொண்டு PSLV-C59 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது. சூரியனின் மேற்புற வளிமண்டலமான கரோனாவை ஆய்வு செய்ய செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது.

Proba-3 என்பது சூரியனின் கரோனாவை ஆராய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு கூட்டுப் பணியாகும், இது அதன் வளிமண்டலத்தின் வெளிப்புற அடுக்கு ஆகும், இது சூரிய இயக்கவியல் மற்றும் விண்வெளி வானிலை நிகழ்வுகளைப் புரிந்துகொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இது குறித்து இஸ்ரோ நிறுவனம். “PSLV-C59 ரொக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பறந்தது, இது NSIL தலைமையிலான உலகளாவிய பணியின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இஸ்ரோவின் தொழில்நுட்பத்துடன், ESA இன் அற்புதமான PROBA-3 செயற்கைக்கோள்களை நிலைநிறுத்துகிறது. சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் இந்தியாவின் விண்வெளி சாதனைகளின் ஒருங்கிணைப்பைக் கொண்டாடும் பெருமையான தருணம் என்று இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்