அதிசயம்.! அசாமில் காணப்படும் இந்தியாவின் ஒரே “Golden Tiger”
அசாமின் காசிரங்காவில் காணப்பட்ட ஒரு கோல்டன் புலியின் படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது இந்தியாவில் உயிருடன் இருப்பதாக அறியப்பட்ட ஒரே தங்க புலி இதுவாகும். இந்திய வன அலுவலர் பர்வீன் கஸ்வான் அவர்களால் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘டாபி புலி’ அல்லது ‘ஸ்ட்ராபெரி புலி’ என்றும் அழைக்கப்படும் கோல்டன் புலியின் படங்களை வனவிலங்கு புகைப்படக் கலைஞர் மயூரேஷ் ஹென்ட்ரே இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்.
21 ஆம் நூற்றாண்டில் உலகத்தில் இதுபோன்ற பெரிய பூனையின் ஒரே ஆவணம் என்று இந்த புகைப்படத்தை கஸ்வான் ட்வீட் செய்துள்ளார். இந்த புலி மிகவும் அரிதானது மற்றும் தங்க நிறம் கொண்டது இது ஒரு “பின்னடைவு மரபணு” காரணமாக இது விரிவான இனப்பெருக்கம் காரணமாக இந்த நிறம் வெளிப்படுத்தப்படுகிறது என்று அவர் மேலும் ட்வீட் செய்துள்ளார்.</
Do you know in #India we have a Golden #Tiger also. Only documentation of such big cat in 21st century on planet. This by Mayuresh Hendre. Look at this beauty. pic.twitter.com/8kiOy5fZQI
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) July 10, 2020
p>