லடாக் எல்லையில் பிரதமரை விமர்சிக்கும் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.ராகுல் காந்தி, “பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் இருக்கும்போது சீனா இந்தியாவின் நிலத்தை சீனாவால் கைப்பற்றப்பட்டது என தெரிவித்தார்.
லடாக் எல்லையில் உள்ள கல்வான் பகுதியில் கடந்த மாதம் 15-ம் தேதி இந்தியா-சீனா இடையே மோதல் ஏற்பட்டது. அதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், சீனா தரப்பில் பலரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது.
இதன்காரணமாக, இரு நாட்டு ராணுவத்திற்கிடையே பதற்றம் ஏற்பட்டது. இதனை தணிக்கும் விதமாக, இரு நாட்டு ராணுவப்படை கமாண்டர்கள் மட்டத்திலும், இரு நாட்டு உயர் அதிகாரிகள் தரப்பிலும், தூதரக அளவிலும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்தது.
அந்த பேச்சுவார்த்தை முடிவில், இருநாட்டு ராணுவமும் எல்லையிலிருந்து விலகி சென்றது. இதனால் அங்கு நீடித்த பதற்றம் பெரும்பாலும் குறைந்தது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் எம்.பி.ராகுல் காந்தி, ஞாயிற்றுக்கிழமை லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக மீண்டும் மத்திய அரசை விமர்சித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இருக்கும்போது சீனா இந்தியாவின் நிலத்தை “கைப்பற்றியது” என்ன? என்று கேள்வி எழுப்பினார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டார். அதில் அவர், “பிரதமர் மோடியின் ஆட்சியில் என்ன நடந்திருக்கிறது? என கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, பாரத மாதாவின் புனிதமான நிலம் சீனாவால் பறிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
மேலும், எல்லைப்பிரச்னையில் ஊடங்களை மத்திய அரசு தவறாக வழிநடத்தி விட்டதாகவும், எல்லையில் நடந்த மோதல், இந்தியாவுக்குப் பின்னடைவே என ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் கூறியதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…