இந்தியாவின் சுதந்திர தின கொண்டாட்டங்கள்..!

Default Image

இந்தியாவில் 75 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் சுதந்திர தின நாள் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. நமது நாடு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி ஒரு நாடாக 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் அறிவிக்கப்பட்டது. இதனை நாம் விடுதலை நாளாக கொண்டாடுகிறோம். இந்த நாளில் இந்தியா முழுவதும் தேசிய கோடி ஏற்றி மரியாதை செலுத்தப்படும்.

இந்திய நாட்டின் பிரதமர், தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசிய கோடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பார். இங்கு நடைபெறும் விழாவில் முப்படை அணிவகுப்பு, நடனம், நாட்டியம் போன்ற பலவகையான வண்ணமய நிகழ்ச்சிகளும் இடம்பெறும். மேலும் அன்றைய நாளில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு நினைவுகூறும் வகையில் மரியாதை செலுத்தப்படுவர். இதனை அடுத்து கடந்த ஆண்டு நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்ற வளர்ச்சியை குறித்தும், அடுத்த ஆண்டிற்கான குறிக்கோள் திட்டங்களை குறித்தும் பிரதமர் அறிவிப்பார்.

இதே போன்று ஒவ்வொரு மாநிலத்தலைநகரத்திலும் மாநிலத்தில் உள்ள முதலமைச்சர்களால் தேசிய கோடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும். இதனை அடுத்து மக்களுக்கு வாழ்த்துகளோடு நலத்திட்ட உதவிகள் போன்றவை குறித்து உரையாற்றுவர். இதேமுறையில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியாளர்களும், அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகளும், கல்லூரி/ பள்ளிகளில் அதன் முதல்வர்/தலைமையாசிரியர் ஆகியோரால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு இனிப்பு வழங்கப்படும்.

ஒவ்வொரு வருடமும் சுதந்திர தின நாள் நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், தற்போது கொரோனா பரவல் காலம் என்பதால் விழாவை விமர்சையாக கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து மத்திய உள்துறையிடமிருந்து அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், கொரோனா பரவல் இருக்கும் இந்த நேரத்தில் சுதந்திர தின விழா அன்று அதிகமாக கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும், குறைந்த எண்ணிக்கையில் கலந்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மக்கள் பார்க்கக்கூடிய விதமாக சுதந்திர தின நிகழ்ச்சியை சமூக வலைத்தளத்தில்  பகிர்ந்துகொள்ளுமாறும், இந்த விழாவில் கொரோனா காலத்தில் பேருதவியாக விளங்கிய மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப்பணியாளர்கள் ஆகியோரை கவுரவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்