தேசிய கொடியை போர்த்திக்கொண்டு அதானி குழுமம் நாட்டை கொள்ளையடிக்கிறது.! ஹிண்டன்பர்க் பதிலடி.!

Published by
மணிகண்டன்

இந்தியா நல்ல செயல்பாடுகளுடன் வளர்ந்து வரும் விரைவில் வல்லரசாகும். அனால் அதே சமயம், அதானி குழுமம் காரணமாக  இந்தியாவின் வளர்ச்சி தடைபடுகிறது. – அமெரிக்க ஹிண்டன்பர்க் நிறுவனம்.

ஹிண்டன்பர்க் அறிக்கை : அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் எனும் நிறுவனம் அண்மையில் இந்தியா தொழிலதிபரும், உலக பணக்கார வரிசையில் இருப்பவருமான அதானி பற்றி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் விளைவாக அடுத்து அதானி பங்குகள் விலை வெகுவாக சரிந்தது. அதானி குழுமத்தின் முதலீட்டாளர்கள் இரண்டு நாட்களில் மட்டும் 4 லட்சம் கோடி ரூபாய் அளவில் இழப்பீட்டை சந்தித்தனர்.

அதானி குழுமம் மறுப்பு : இதனை அடுத்து, ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கை போலியானது.  இது ஒரு தனிப்பட்ட நிறுவனத்தின் மீதான தாக்குதலாக கடந்து விட முடியாது. இதனை இந்தியா மற்றும் இந்திய நிறுவனங்களின் சுதந்திரம், ஒற்றுமை, தரம், வளர்ச்சி உள்ளிட்டவை மீது தொடுக்கப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் என குறிப்பிட்ட அதானி தரப்பு, போலியான செய்தி வெளியிட்ட ஹிண்டன்பர்க் நிறுவனம் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியிருந்தது. 

இந்திய தேசியம் எனும் போர்வை : அதானி குழுமத்தின் இந்த மறுப்பு செய்தியை அடுத்து மீண்டும் ஹிண்டன்பர்க் நிறுவனம் ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதில், அதானி குழுமமானது, இந்திய தேசியம் எனும் போர்வையில் தன்னை மறைத்துக்கொண்டு சில மோசடி குற்றச்சாட்டுகளில் இருந்து தன்னை தப்பிக்க நினைக்கிறது. என குற்றம் சாட்டினர்.

இந்தியாவின் வளர்ச்சிக்கு தடை : மேலும், இந்தியா ஒரு நல்ல சுறுசுறுப்பான ஜனநாயக நாடு. இந்தியா நல்ல செயல்பாடுகளுடன் வளர்ந்து வரும் விரைவில் வல்லரசாகும். அனால் அதே சமயம், இந்திய கொடியை போர்த்திக்கொண்டு நாட்டை கொள்ளையடிக்கும் அதானி குழுமம் காரணமாகத்தான்  இந்தியாவின் வளர்ச்சியும் தடைபடுகிறது. என குற்றம் சாட்டியுள்ளது ஹிண்டன்பர்க் நிறுவனம்.

Published by
மணிகண்டன்

Recent Posts

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு: சீமான் மீது 11 மாவட்டங்களில் வழக்குப்பதிவு!

சென்னை: பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இது தற்போது அரசியல்…

60 minutes ago

“சாம்பியன்ஸ் டிராபிக்கு கண்டிப்பா சஞ்சு சாம்சன் தேவை” வேண்டுகோள் வைத்த முன்னாள் வீரர்கள்!

சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு அணியில் விளையாட வாய்ப்புகள் சரியாக வழங்கப்படாதது ஒரு பெரிய கேள்விக்குறியான…

1 hour ago

Live : சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல்…பெரியார் குறித்து சீமான் சர்ச்சை பேச்சு வரை!

சென்னை : 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 5-ஆம்…

2 hours ago

“மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாகப் பேச மாட்டார்கள்”…அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது.  பெரியார் குறித்து…

2 hours ago

“நான் போட்டியிட்டு இருந்தால் டொனால்ட் டிரம்ப்பை வீழ்த்தியிருப்பேன்”…ஜோ பைடன் பேச்சு!

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.…

3 hours ago

திருப்பதியில் கூட்ட நெரிசல் விவகாரம் : பவன் கல்யாண் தீட்சை செய்வாரா? – ரோஜா கேள்வி!

திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…

4 hours ago