தேசிய கொடியை போர்த்திக்கொண்டு அதானி குழுமம் நாட்டை கொள்ளையடிக்கிறது.! ஹிண்டன்பர்க் பதிலடி.!
இந்தியா நல்ல செயல்பாடுகளுடன் வளர்ந்து வரும் விரைவில் வல்லரசாகும். அனால் அதே சமயம், அதானி குழுமம் காரணமாக இந்தியாவின் வளர்ச்சி தடைபடுகிறது. – அமெரிக்க ஹிண்டன்பர்க் நிறுவனம்.
ஹிண்டன்பர்க் அறிக்கை : அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் எனும் நிறுவனம் அண்மையில் இந்தியா தொழிலதிபரும், உலக பணக்கார வரிசையில் இருப்பவருமான அதானி பற்றி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் விளைவாக அடுத்து அதானி பங்குகள் விலை வெகுவாக சரிந்தது. அதானி குழுமத்தின் முதலீட்டாளர்கள் இரண்டு நாட்களில் மட்டும் 4 லட்சம் கோடி ரூபாய் அளவில் இழப்பீட்டை சந்தித்தனர்.
அதானி குழுமம் மறுப்பு : இதனை அடுத்து, ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கை போலியானது. இது ஒரு தனிப்பட்ட நிறுவனத்தின் மீதான தாக்குதலாக கடந்து விட முடியாது. இதனை இந்தியா மற்றும் இந்திய நிறுவனங்களின் சுதந்திரம், ஒற்றுமை, தரம், வளர்ச்சி உள்ளிட்டவை மீது தொடுக்கப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் என குறிப்பிட்ட அதானி தரப்பு, போலியான செய்தி வெளியிட்ட ஹிண்டன்பர்க் நிறுவனம் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியிருந்தது.
இந்திய தேசியம் எனும் போர்வை : அதானி குழுமத்தின் இந்த மறுப்பு செய்தியை அடுத்து மீண்டும் ஹிண்டன்பர்க் நிறுவனம் ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதில், அதானி குழுமமானது, இந்திய தேசியம் எனும் போர்வையில் தன்னை மறைத்துக்கொண்டு சில மோசடி குற்றச்சாட்டுகளில் இருந்து தன்னை தப்பிக்க நினைக்கிறது. என குற்றம் சாட்டினர்.
இந்தியாவின் வளர்ச்சிக்கு தடை : மேலும், இந்தியா ஒரு நல்ல சுறுசுறுப்பான ஜனநாயக நாடு. இந்தியா நல்ல செயல்பாடுகளுடன் வளர்ந்து வரும் விரைவில் வல்லரசாகும். அனால் அதே சமயம், இந்திய கொடியை போர்த்திக்கொண்டு நாட்டை கொள்ளையடிக்கும் அதானி குழுமம் காரணமாகத்தான் இந்தியாவின் வளர்ச்சியும் தடைபடுகிறது. என குற்றம் சாட்டியுள்ளது ஹிண்டன்பர்க் நிறுவனம்.