இந்தியாவின் முதல் வாக்காளர் காலமானார்!

Default Image

இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகி தனது 106வது வயதில் காலமானார்.

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த ஷியாம் சரண் நேகி (வயது 106) உடலனல குறைவால் காலமானார். இமாச்சலப் பிரதேசத்தின் கின்னூரில் வசிக்கும் நேகி, வரவிருக்கும் நவ.12ல் ஹிமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்காக நவம்பர் 2-ஆம் தேதி தபால் மூலம் வாக்களித்திருந்தார். இவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷியாம் சரண் நேகி இல்லத்துக்குச் சென்று முழு மரியாதையுடன் இறுதிச் சடங்குகளைச் செய்வோம் என்று கின்னவுர் துணை ஆணையர் அபித் உசேன் சாதிக் தெரிவித்தார். இதுவரை 34 தேர்தலுக்கு வாக்களித்துள்ள இவர், நாட்டின் முதல் தேர்தலில் (1951) முதல் நபராக வாக்களித்தவர் என்ற பெருமையை பெற்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்