கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியா முதல் வெற்றி.! – ராய்ட்டர்ஸ் அறிவிப்பு.!
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 6,761 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை 206 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், இந்தியா கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியா முதல் வெற்றியை பெற்றுள்ள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.
அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘ மத்திய வெளியுறவு அமைச்சராக செயலாளர் விகாஸ் ஸ்வரூப் கூறுகையில், இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. சரியான நேரத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பெரும் சமூக தொற்று தவிர்க்கப்பட்டுள்ளது.
அப்படி ஊரடங்கு பிறப்பிக்கப்படாமல் இருந்திருந்தால், இதுவரை 8 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பர். இத்தாலி போல பெரிய உயிரிழப்புகளை சந்தித்திருக்கும்.
தற்போது இந்தியாவில் உள்ள சுமார் 600 நகரங்களில் 275 நகரங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு உள்ளது. இதனால், அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எளிதாக ஈடுபடுகிறது. என விகாஸ் ஸ்வரூப் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.