இந்தியாவின் முதல் மறுபயன்பாடு ஹைப்ரிட் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.!
சென்னை : இந்தியா தனது முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட், RHUMI 1 ஐ விண்ணில் ஏவப்பட்டது.
நாட்டின் முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்டான RHUMI-1ஐ விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த செயற்கைகோள்கள் பருவநிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சி தகவல்களை சேகரிக்கும்.இந்த ராக்கெட் 50 PICO செயற்கைக்கோள்களையும் மூன்று கியூப் செயற்கைக்கோள்களையும் சுமந்து சென்றது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனமான ஸ்பேஸ் சோன் இந்தியா மற்றும் மார்ட்டின் குழுமம் இணைந்து உருவாக்கிய, இந்த ராக்கெட் சென்னை திருவிடந்தையிலிருந்து மொபைல் லாஞ்சரைப் பயன்படுத்தி ஏவப்பட்டது.
விண்ணின் ஏவப்பட்ட இந்த RHUMI-1 என்ற செயற்கைக்கோள், புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான ஆராய்ச்சி தகவல்களை சேகரிக்கும். ராக்கெட்டில் ஜெனரிக்-எரிபொருள் அடிப்படையிலான கலப்பின மோட்டார் மற்றும் மின்சாரத்தால் உருவாக்கப்பட்ட பாராசூட் டிப்ளோயர் உள்ளது.
ISRO செயற்கைக்கோள் மையத்தின் (ISAC) முன்னாள் இயக்குனர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரையின் வழிகாட்டுதலின் கீழ், RHUMI பணி உருவாக்கப்பட்டது. இந்தியா 500 கிலோ வரை சுமக்கும் திறன் கொண்ட இரண்டு-நிலை ராக்கெட்டுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இது, எதிர்காலத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாலைவனங்களில் இருந்து ஏவுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் பணிகள் நடைபெற்று வருகின்றன.