#Justnow : வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்…!

Default Image

‘விக்ரம் – எஸ்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்ட தனியார் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ செயற்கைக்கோள்களை வடிவமைத்து, ராக்கெட் உதவியுடன் விண்ணில் நிறுத்தி வருகிறது. இந்த நிலையில்,ஐதரபாத்தைச் சேர்ந்த ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ என்ற தனியார் நிறுவனம், ‘விக்ரம் – எஸ்’ என்ற பெயரில் ராக்கெட் தயாரித்துள்ளது.

இந்த ராக்கெட், 83 கிலோ எடையை தூக்கி செல்லும் திறன் கொண்டது. இந்த ராக்கெட் 545 கிலோ எடை, 6 மீட்டர் உயரம் கொண்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ தளத்தில் இருந்து 11.30 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

இந்த ராக்கெட் இரண்டு இந்திய செயற்கைக்கோள் உட்பட மூன்று செயற்கை கோள்களை வெற்றிகரமாக சுமந்து சென்றுள்ளது. பூமியின் மேற்பரப்பில், 120 கி.மீ உயரத்தில் 3 செயற்கை கோள்களும் நிறுவப்பட  உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்